For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

By Maha
|

நீங்கள் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அப்படியானால் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் டயட்டில் ஓட்ஸை எடுத்து வந்தால், உடல் எடையானது விரைவில் குறைவதுடன், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

இங்கு ஓட்ஸை மாதுளையுடன் சேர்த்து எப்படி மில்க் ஷேக் செய்வது என்று விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டில் செய்து பாருங்கள்.

Pomegranate Oats Milkshake

தேவையான பொருட்கள்:

மாதுளை - 1 பழம்
ஓட்ஸ் - 1/2 கப்
குளிர்ந்த பால் - 2 1/2 கப்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் மாதுளையை சுத்தம் செய்து, அதன் விதையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் மாதுளை, வறுத்த ஓட்ஸ் மற்றும் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் தேன் சேர்த்து ஒருமுறை அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Pomegranate Oats Milkshake

Are you in diet? Want to make a tasty and healthy breakfast? Then try this pomegranate oats milkshake recipe. Its very simple to prepare. Take a look...
Story first published: Tuesday, June 10, 2014, 19:00 [IST]
Desktop Bottom Promotion