For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் மைதா சீடை

By Maha
|

கிருஷ்ணனுக்கு சீடையும் மிகவும் இஷ்டம். எனவே பலர் கிருஷ்ண ஜெயந்தி அன்று சீடை செய்வார்கள். உங்களுக்கு சீடையை பக்குவமாக செய்யத் தெரியாதெனில், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள மைதா சீடை ரெசிபியை படித்து செய்து பாருங்கள். நிச்சயம் இது எளிமையான செய்முறையைக் கொண்டிருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த மைதா சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Maida Seedai Recipe: Krishna Jayanthi Recipe

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 3 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சல்லடை கொண்டு ஒரு முறை சலித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அதனையும் சலித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, பொட்டுக்கடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மைதா சீடை ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Maida Seedai Recipe: Krishna Jayanthi Recipe

Want to know how to make maida seedai for this krishna jayanthi? Here is the simple way. Take a look...
Story first published: Thursday, August 14, 2014, 19:31 [IST]
Desktop Bottom Promotion