For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்திரிக்காய் பக்கோடா

By Maha
|

இதுவரை கத்திரிக்காயை பொரியல், வறுவல், குழம்பு, சாம்பார் என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த கத்திரிக்காயை பக்கோடா செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், கத்திரிக்காயை பக்கோடா செய்து சாப்பிட்டால், அது மிகவும் சுவையாக இருக்கும்.

இங்கு அந்த கத்திரிக்காய பக்கோடா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

Hot And Spicy Brinjal Pakoda

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 2
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் கத்திரிக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு கத்திரிக்காயை எடுத்து, அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காயை மாவில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட வேண்டும். இதேப் போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், கத்திரிக்காய் பக்கோடா ரெடி!!!

English summary

Hot And Spicy Brinjal Pakoda

Brinjal pakora is a yummy tea time snack. Discover how to make brinjal pakora by following this easy recipe. Brinjal pakoda are easy and simple to make.
Story first published: Thursday, May 15, 2014, 17:39 [IST]
Desktop Bottom Promotion