For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொண்டைக்கடலை கட்லெட்

By Maha
|

கொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையை அதிகம் கொடுப்பது நல்லது. அதிலும் அதனை சன்னா செய்து கொடுக்காமல், அதனை வித்தியாசமாக கட்லெட் போன்று செய்து கொடுக்கலாம். இப்படி செய்து கொடுப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இங்கு அந்த கொண்டைக்கடலை கட்லெட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Healthy Chickpeas Cutlet

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 2 கப்
பார்ஸ்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொண்டைக்கடலையை நீரில் 5-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் அதைப் போட்டு, அத்துடன் வெங்காயம், பார்ஸ்லி, பூண்டு, மல்லி தூள், சீரகம், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதனை கட்லெட் வடிவில் செய்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கொண்டைக்கடலை கட்லெட் ரெடி!!!

English summary

Healthy Chickpeas Cutlet

Chickpeas cutlet is a traditional dish from the Middle East. Chickpeas are high in protein because chickpeas are a good source for protein. So, check out the recipe for chickpeas cutlet and do give it a try.
Story first published: Thursday, April 10, 2014, 15:56 [IST]
Desktop Bottom Promotion