Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கறிக்குழம்பு சுவையை மிஞ்சும் சுரைக்காய் குழம்பை எப்படி செய்றது-ன்னு பாருங்க...
Sorakkai Kuzhambu Recipe In Tamil: மதியம் எப்போதும் ஒரே சுவையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு கறிக்குழம்பு சுவையில் ஒரு அசத்தலான குழம்பு செய்யுங்கள்.
இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாகவும் இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த குழம்பை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கூறுவார்கள்.

உங்களுக்கு சுரைக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சுரைக்காய் - 150 கிராம் ( தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மல்லி, சீரகம், சோம்பு,
மிளகு, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து, நிறம் மாறும் வரை வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் மஞ்சள்
தூள் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய சுரைக்காயை சேர்த்து,
மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி 5 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, பச்சை
வாசனை போக நன்கு வதக்கி, குழம்புக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி,
மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான சுரைக்காய் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications