Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
ஹோட்டல் ஸ்டைல் சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க..
Hotel Style Sorakkai Kootu Recipe In Tamil: மதியம் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கூட்டு செய்யுங்கள். அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் சுரைக்காய் கூட்டு செய்யுங்கள்.
இந்த கூட்டு சாதத்துடன் மட்டுமின்றி சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த கூட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மதிய வேளையில் டக்கென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த கூட்டு ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் சுரைக்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சுரைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுரைக்காய் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 1/4 கப் (நீரில் 15 நிமிடம் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் பாசிப்பருப்பை போட்டு 2 முறை
நீரில் கழுவி விட்டு, பின் அதில் சிறிது நீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட
சுரைக்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டீஸ்பூன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
மல்லித் தூள் சேர்த்து, சுரைக்காயின் நிறம் சற்று மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, காய்கறி மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், மிளகு, சீரகம், சின்ன
வெங்காயம் மற்றும் சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை
அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி,
3 நிமிடம் ஓரளவு நீர் வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
ஹோட்டல் ஸ்டைல் சுரைக்காய் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











