Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மணமணக்கும்... சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு
சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இந்த கருவாட்டு குழம்பானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆகவே இதன் சுவை சற்று தனித்தே தெரியும்.
கருவாட்டு பிரியர்களே! நீங்கள் இதுவரை பலமுறை கருவாட்டு குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இந்த கருவாட்டு குழம்பானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆகவே இதன் சுவை சற்று தனித்தே தெரியும். உங்களுக்கு சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை சுவைக்க ஆசையாக உள்ளதா?

அப்படியென்றால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 சிறு எலுமிச்சை அளவு
* சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
* பூண்டு - 5 பல் (நீளமாக கீறியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 1 /2 கப்
* தண்ணீர் - 1 கப்
* நெத்திலி கருவாடு - 2 பாக்கெட்
செய்முறை:
* முதலில் கருவாட்டை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஒரு 10 நிமிடம் ஊற வைத்து, நன்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த புளி நீரில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி ஒரு கப் நீர் ஊற்றி, கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதை அடுப்பில் வைத்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்போது அதில் நல்லெண்ணெயை ஊற்றி, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பானது ஓரளவு கெட்டியானதும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து கிளறி, ஒரு 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு தயார்.
குறிப்பு:
* கருவாட்டு குழம்பை தயாரித்த, ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டால் தான் அதன் சுவை நன்றாக இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications