Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சிவகாசி ஸ்பெஷல் மட்டன் வறட்டு கறி.. இந்த சன்டே செஞ்சு வீட்டுல இருக்குறவங்கள அசத்துங்க...
Sivakasi Special Mutton Varatu Kari Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் மட்டன் சமைக்கப் போகிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிவகாசி ஸ்பெஷல் மட்டன் வறட்டு கறியை செய்யுங்கள்.
இந்த மட்டன் கறி சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது காரசாரமாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். குளிர்காலத்தில் இப்படியான ரெசிபியை செய்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு சிவகாசி ஸ்பெஷல் மட்டன் வறட்டு கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவகாசி ஸ்பெஷல் மட்டன் வறட்டு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 டம்ளர்
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 25
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, வரமிளகாய், சீரகம், மிளகு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மட்டனை கழுவி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* மட்டனில் இருந்து நீர் விட்டு வந்ததும், அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான சிவகாசி ஸ்பெஷல்
மட்டன் வறட்டு கறி தயார்.



Click it and Unblock the Notifications
