Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
நீங்க வெக்குற வெண்டைக்காய் சாம்பார் வழுவழுன்னு இருக்குமா? அப்ப இந்த மாதிரி செய்யுங்க..
Simple Vendakkai Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி வெண்டைக்காயை சமைப்பீர்களா? வெண்டைக்காயை கொண்டு பொரியல், சாம்பார், புளிக்குழம்பு என என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வெண்டைக்காய் வழுவழுப்பான தன்மையைக் கொண்டதால், இதை பக்குவமாக சமைத்தால் தான் அந்த வழுவழுப்புத்தன்மை இல்லாமல் இருக்கும்.
நீங்கள் வைக்கும் வெண்டைக்காய் சாம்பார் எப்போதும் வழுவழுப்பாக இருக்குமா? அப்படியானால் அடுத்தமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் செய்வது மிகவும் சுலபம். மேலும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு வழுவழுப்புத்தன்மை இல்லாத வெண்டைக்காய் சாம்பாரை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெண்டைக்காய் - 250 கிராம்
பிற பொருட்கள்...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சுடுநீர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
பருப்பு வேக வைப்பதற்கு..
* துவரம் பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் புளியை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து பிசைந்து, சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துவரம் பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள்
தூள், எண்ணெய் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை
மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும்
குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
வெண்டைக்காயை போட்டு, மிதமான தீயில் வைத்து, 5-6 நிமிடம் பொன்னிறமாக,
பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு, சீரகம், வரமிளகாய் பச்சை மிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளியைப்
போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், சாம்பார் தூள், வெல்லம் மற்றும்
பெருங்காயத் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் சிறிது நீரையும்
சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து, அத்துடன் வேக வைத்து
மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி
கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications