Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
Simple Potato Snacks Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? எப்போதும் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்வதற்கு பதிலாக, உருளைக்கிழங்கும் கோதுமை மாவும் வீட்டில் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்யுங்கள்.
இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
மசாலாவிற்கு..
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து துருவியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் ஓமத்தை கைகளால் நசுக்கி சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், எண்ணெய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து
கைகளால் பிரட்டி, தேவையான அளவு நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதை மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சில்லி
ப்ளேக்ஸ், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை
சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை இரண்டாக பிரித்து, ஒரு
உருண்டையை எடுத்து, அதை சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதன் நடுவே பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை மசாலாவை பாதி
எடுத்து வைத்து அதை அப்படியே தேய்த்த சப்பாத்தி அளவிற்கு கைகளால்
பரப்பி விட வேண்டும்.
* பின்பு அதை அப்படியே ரோல் போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் கத்தியால் ஒரு இன்ச் துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும்
எடுத்து, தட்டையாக அழுத்தி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும். இதேப் போன்று மற்றொரு உருண்டையையும் செய்ய வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதைப் போட்டு,
பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுத்தால், சுவையான
உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார்.
Image Courtesy: TANISHQA VIDEOS



Click it and Unblock the Notifications











