Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஒரு உருளைக்கிழங்கு இருந்தா போதும்.. இப்படி சாதம் செஞ்சு ஸ்கூலுக்கு கொடுங்க.. சூப்பரா இருக்கும்...
Potato Rice Recipe: காலையில் உங்க குழந்தைக்கு ஸ்கூலுக்கு என்ன சமைத்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு கலவை சாதம் செய்து கொடுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு சாதம் மதிய வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் அலுவலகத்திற்கு செல்பவர்களும் இந்த சாதத்தை கொண்டு செல்லலாம்.

நீங்களும், உங்கள் குழந்தைகளும் உருளைக்கிழங்கு பிரியர் என்றால் நிச்சயம் இந்த ரெசிபி ரொம்ப பிடிக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கு சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே உருளைக்கிழங்கு சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 1 கப்
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சாதத்தை தயார் செய்து கொள்ள வேண்டும்.
* பின் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக
வெட்டி, நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து, அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கிளறி, உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், அதில் சாதத்தை சேர்த்து நன்கு
கிளறி, ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லி மற்றும் கசூரி
மெத்தியைத் தூவி, நெய்யை ஊற்றி கிளறினால், சுவையான உருளைக்கிழங்கு
தயார்.
Image Courtesy: blogexplore



Click it and Unblock the Notifications