Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
என்ன செஞ்சாலும் சிக்கன் ரோஸ்ட் சுவையா இருக்கமாட்டீங்குதா? அப்ப இப்படி செய்யுங்க.. செமயா இருக்கும்..
Chicken Roast Recipe: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? வீட்டில் உள்ளோர் சிக்கன் ரோஸ்ட் செய்து கொடுக்க கேட்பார்களா? ஆனால் நீங்கள் செய்யும் சிக்கன் ரோஸ்ட் அவ்வளவு சுவையாக இருக்காதா?
அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சிக்கன் ரோஸ்ட் செய்யுங்கள். இந்த சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

குறிப்பாக இந்த சிக்கன் ரோஸ்ட் பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம்.
உங்களுக்கு சிக்கன் ரோஸ்ட்டை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 750 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 5
* வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து சில
நொடிகள் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு கிளறி விட வேண்டும். பச்சை மிளகாயை வெட்ட வேண்டாம்.
இல்லாவிட்டால் காரம் அதிகமாகிவிடும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மசாலா பொடிகளை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மசாலா ஒன்று சேரும் வரை கிளறி,
வாணலியை மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து சிக்கனை வேக
வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்து, ட்ரை ஆனதும், நெய் சேர்த்து, கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன்
ரோஸ்ட் தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications