Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சிக்கன் எடுத்தா.. ஒருவாட்டி இந்த ஸ்டைலில் கிரேவி செய்யுங்க.. இட்லி, பூரிக்கு சும்மா அள்ளும்...
Chicken Gravy Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது பூரி தான் டிபனாக இருக்குமா? அப்படி செய்யும் இட்லி அல்லது பூரிக்கு சிக்கனை அடிக்கடி வாங்கி சமைப்பீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் சிக்கன் கிரேவியை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒரே சுவையில் செய்யாமல் ஒருமுறை இந்த பக்குவத்தில் கிரேவியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் கிரேவி செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருப்பதோடு, டேஸ்ட்டியாகவும் இருக்கும். முக்கியமாக இது இட்லி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த கிரேவியை காலையில் செய்துவிடுங்கள். இதனால் நாள் முழுவதும் இதை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு சிம்பிளான அதே சமயம் டேஸ்ட்டியான சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* கல்பாசி - 1 துண்டு
* மிளகு - 10
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 10
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1/2 இன்ச் (தட்டிக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 2 (தட்டிக் கொள்ளவும்)
* பூண்டு - 7 பல் (தட்டிக் கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 3/4 கிலோ
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு,
மல்லி, ஏலக்காய், கல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து வறுத்து
இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன
வெங்காயம், கறிவேப்பிலை, பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய மற்ற பொருட்களை சேர்த்து, அத்துடன் துருவிய
தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு
பற்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து,
கொத்தமல்லியை சிறிது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தக்காளியை
சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து
நன்கு கிளறி விட்டு, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து சிக்கனுடன் சேருமாறு
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு
நீரை ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன்
கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











