Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம்
சிம்பிளான முறையில் பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி?
பீட்ரூட் பொரியலை செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு பீட்ரூட் பொரியலை எளிய முறையில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் பொரியல் செய்யலாம். பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். அந்த நன்மைகளாவன இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும், ஸ்டாமினாவை அதிகரிக்கும், இதயத்தை நல்ல அமைப்பில் வைத்துக் கொள்ளும், புற்றுநோயைத் தடுக்க உதவும், ஞாபக மறதியைத் தடுக்க உதவும், சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் கண்களுக்கு நல்லது. இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

முக்கியமாக பீட்ரூட் பொரியலை செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு பீட்ரூட் பொரியலை எளிய முறையில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பீட்ரூட் - 1 (பெரியது)
* பச்சை மிளகாய் -1
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு, வெங்காயம் வேக சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் நறுக்கிய பீட்ரூட்டைப் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து பீட்ரூட்டை வேக வைக்க வேண்டும்.
* பீட்ரூட் நன்கு வெந்து, நீர் வற்றியதும், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications
