Latest Updates
-
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
வாழைப்பழமும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க...
Banana Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகள் சாப்பிட சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்களா? குறிப்பாக இனிப்பு போண்டாவை விரும்பி சாப்பிடுவார்களா?
உங்கள் வீட்டில் வாழைப்பழமும், மைதாவும் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பழத்தைக் கொண்டு ஒரு அட்டகாசமாக சுவையைக் கொண்ட வாழைப்பழ போண்டாவை செய்யுங்கள்.

இந்த வாழைப்பழ போண்டா குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது இந்த போண்டாவை செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு வாழைப்பழ போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிறிய வாழைப்பழம் - 6 (நன்கு கனிந்தது)
* மைதா - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் சர்க்கரை
சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழம், மைதா, பேக்கிங் சோடா
மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* மாவை கட்டிகளின்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூனை எடுத்து, அந்த ஸ்பூனில் பிசைந்து
வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் போண்டாக்களாக பொரித்து எடுத்தால்,
சுவையான வாழைப்பழ போண்டா தயார்.
Image Courtesy: cookerypark



Click it and Unblock the Notifications