Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்டுல பச்சை பட்டாணி இருந்தா.. இந்த மாதிரி மசாலா செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு செமயா இருக்கும்..
Pacha Pattani Masala Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? ஒரு சிம்பிளான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? எப்போதும் உருளைக்கிழங்கு குருமா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா?
அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு மசாலாவை செய்யுங்கள். இந்த பச்சை பட்டாணி மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, பூரியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு பச்சை பட்டாணி மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பட்டாணி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பட்டாணி - 1 1/2 கப்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச் துண்டு
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* முந்திரி - 12
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, மிளகாய் தூள், மஞ்சள்
தூள், கரம் மசாலா, தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி, பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை ஊற்றி, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் மேலே
மிதக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, பச்சை பட்டாணியை சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி மூடி வைத்து 4-5 நிமிடம் குறைவான தீயில்
வைத்து பட்டாணியை வேக வைத்து இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி மசாலா
தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications