Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
Saravana Bhavan Cauliflower Kurma Recipe in Tamil: இட்லி, தோசை போரடித்து விட்டால் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு டிபனாக இருப்பது பூரி, சப்பாத்திதான்? அப்படி பூரி, சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கு மசாலாயும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் காலிஃபிளவர் குருமாவை செய்யுங்கள்.

சரவணபவன் ஹோட்டலில் சப்பாத்தி, பூரிக்கு பரிமாறப்படும் காலிஃபிளவர் குருமா எப்போதும் கொஞ்சம் வித்தியாசமானது மற்றும் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இந்த குருமா செய்வதற்கு ஒரு தனி மசாலாவை அரைக்க வேண்டும். இந்த ஸ்டைலில் குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அனைவரும் இன்னும் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, இடியாப்பம் போன்றவற்றுக்கும் சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு சரவணபவன் காலிஃப்ளவர் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- 2 ஸ்பூன் கசகசா
- 1 ஸ்பூன் சோம்பு
- 10 முந்திரி
- ¼ கப் துருவிய தேங்காய்
தக்காளி விழுது அரைக்க:
- 2 பூண்டு பல்
- 4 பச்சை மிளகாய்
- 2 இன்ச் இஞ்சி
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 3 நறுக்கிய தக்காளி
பிற பொருட்கள்:
- 3 கப் நறுக்கிய காலிஃபிளவர்
- தேவையான அளவு உப்பு
-1 ஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
- 2 ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள்தூள்
-1 ஸ்பூன் கொத்தமல்லி இலை
தாளிக்க:
- 2 ஸ்பூன் வெண்ணெய்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 3 கிராம்பு
- 2 ஏலக்காய்
செய்முறை:
- முதலில், கசகசா, சோம்பு, முந்திரி மற்றும் தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- இந்த விழுது குருமாவை கெட்டியாக மாற்றும். இந்த விழுதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, மென்மையான விழுதாக அரைக்கவும். இந்த விழுதை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். அதில் வெண்ணெயை சேர்த்து உருக்கவும். பின்னர் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- மசாலா பொருட்கள் வதங்கியதும் வெங்காயம்-தக்காளி விழுதை வாணலியில் சேர்க்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். வெங்காயம்-தக்காளி கலவையை மூடி வைத்து, மசாலா கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.
- மசாலா வெந்து, அதிலிருந்து எண்ணெய் பிரியத் தொடங்கும்போது, காலிஃபிளவர் துண்டுகளைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- கடாயை மூடி வைத்து காலிஃபிளவர் மென்மையாகும் வரை வேகவைக்கவும். அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள முந்திரி-தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக, கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்து, அடுப்பை அணைத்துவிடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெடி. இதை சப்பாத்தி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
