Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா?
சன்டே ஸ்பெஷல்: சேலம் ஸ்டைல் சிக்கன் சுக்கா
இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையில் சிக்கனை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் சிக்கன் சுக்காவை செய்து கொடுங்கள். இந்த சிக்கன் சுக்கா சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு சேலம் ஸ்டைல் சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலம் ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறித
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* சிறிய தக்காளி - 1
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில், தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி, கிராம்பு, பட்டை, சோம்பு, மல்லி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, சிறிது நீரைத் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து சிக்கனை 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் ஆனதும் மூடியைத் திறந்து, சிக்கன் நன்கு வெந்துவிட்டதா என்று பார்த்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது போன்று வேண்டுமானால், சற்று கிரேவியாக இருக்கும் போதே, அடுப்பை அணைத்துவிடுங்கள். ட்ரையாக வேண்டுமானால், நீரை வற்ற வைத்து பின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
* இறுதியாக மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சேலம் ஸ்டைல் சிக்கன் சுக்கா தயார்.
Image Courtesy: sharmiskitchen



Click it and Unblock the Notifications