Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
அட்டகாசமான சேலம் மட்டன் குருமா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்!
Salem Mutton Kulambu Recipe in Tamil: பொதுவாக சண்டே என்றாலே அனைவருக்குமே முதலில் நினைவிற்கு வருவதுஅசைவ உணவுகள்தான். ஞாயிறு கிழமையை இட்லி மற்றும் மட்டன் குழம்புடன் தொடங்கினால்தான் பெரும்பாலான மக்களுக்கு அன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மட்டன் குழம்பு இட்லி மட்டுமின்றி சாதம், சப்பாத்தி என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையுடன் மனநிறைவையும் கொடுக்கும்.
உங்களுக்கு வழக்கமான மட்டன் குழம்புக்கு பதில் வித்தியாசமான மற்றும் பலமடங்கு சுவையான மட்டன் குழம்பு செய்ய வேண்டுமா? ஆம் எனில் இந்த சேலத்து மட்டன் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். சேலம் மாம்பழத்திற்கு மட்டும் பிரபலமல்ல, இதுபோன்ற தனித்துவமான உணவுகளுக்கும்தான். இந்த பதிவில் அட்டகாசமான சேலத்து மட்டன் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- மட்டன் - 1 கிலோ
- நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
- நறுக்கிய தக்காளி - 1
- மல்லி தூள் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- பட்டை - 2
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 டஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- தேங்காய் - 1 மூடி (துருவியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 10
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- கறிவேப்பிலை - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து,
அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.
- பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனி யாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும்.
- பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி.
- இது இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications





