Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
4 முட்டையும், 2 ஸ்பூன் தயிரும் இருந்தா சேலம் முட்டை குருமாவை செய்யுங்க...சப்பாத்தி,தோசைக்கு அருமையா இருக்கும்!
Salem Muttai Kurma Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அதுவும் சாதத்திற்கு என்று வரும்போது கிரேவி, பொடிமாஸ் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையை வைத்து இந்த சேலம் ஸ்டைல் முட்டைக் குருமாவை மசாலா செய்யுங்கள். இந்த முட்டை மசாலா குருமா தோசை, சப்பாத்திக்கும் மற்றும் சாதத்தில் ஊற்றி சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு முட்டை குருமா மிகவும் பிடிக்குமென்றால் ஒருமுறை இந்த சேலம் முட்டை குருமாவை முயற்சித்துப் பாருங்கள். இந்த முட்டைக் குருமா செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு சுவையும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். ஒரு முறை செய்தால் இந்த குருமாவை அடிக்கடி செய்ய சொல்லி வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.

உங்களுக்கு சேலம் ஸ்டைல் முட்டைக் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேலம் முட்டை மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
- முட்டை - 4
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- தனியாத் தூள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கசகசா - 1 டீ ஸ்பூன்
- பட்டை - 1 சிறு துண்டு
- கிராம்பு - 2
- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- முந்திரிப்பருப்பு - 5
- இஞ்சி - சிறிதளவு (1 இன்ச் அளவு)
- பூண்டு - 6 பற்கள்
- தேங்காய் - ¼ கப்
- பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
- தக்காளி - 2 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கத்தியால் முட்டையின்
மீது கோடுகள் போட்டு எடுத்து வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து
கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேல் பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால்
தண்ணீரில் சுத்தமாக கழுவி கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- இஞ்சியை மண்ணில்லாமல் சுத்தமாக கழுவி தோலை நீக்கி பொடியாக நறுக்கிக்
கொள்ளவும்.
- பின் பூண்டுடன் இஞ்சியை சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்
கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்துக்
கொள்ளவும்.
- பின் தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கசகசா முந்திரிப்
பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- என்னை காய்ந்ததும் அதனுடன் பட்டை கிராம்பு மற்றும் சோம்பு சேர்த்து
தாளித்துக் கொள்ளவும்.
- அதனுடன்நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கண்ணாடி பதம் வந்ததும்
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் தனியா தூள்
மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பச்சை வாசம் போகும் வரை
வேக விடவும்.
- அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு
மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்ததும் அதனுடன் முட்டையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து
கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சேலம் முட்டை குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications