Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
மழை பெய்யும் போது இந்த ரோட்டுக்கடை காளான் வடையை செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Rottukadai Mushroom Vada Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து காலநிலை குளிர்ச்சியாக இருக்கிறது. இப்படி குளிர்ச்சியான காலநிலையில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாக ஏதாவது சாப்பிடத் தோன்றும். உங்களுக்கும். அப்படி தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் உள்ளோரும் ஏதாவது சூடாக மொறுமொறுவென்று செய்து கொடுக்க சொல்கிறார்களா?
அப்படியானால் எப்போதும் செய்வது போன்று பஜ்ஜி, வடை, போண்டாவை செய்யாமல், சற்று வித்தியாசமாக ரோட்டுக்கடைகளில் விற்கப்படும் காளான் வடையை செய்து கொடுங்கள். இந்த காளான் வடை மிகவும் சுவையானது மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், மொறுமொறுவென்று இருக்கும். இந்த வடையுடன் காளானை மட்டுமின்றி, ஸ்வீட் கார்னையும் சேர்க்கும் போது சுவை இன்னும் வேற லெவலில் இருக்கும். ஒருவேளை உங்களிடம் ஸ்வீட் கார்ன் இல்லாவிட்டால், வெறும் காளானை வைத்துக் கொண்டு மட்டும் செய்யலாம்.
உங்களுக்கு ரோட்டுக்கடை காளான் வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை காளான் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* சோள மாவு - 1/4 கப்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* ஸ்வீட் கார்ன் - 1/2 கப்
* காளான் - 1/2 கப் (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி
மாவு, 1/4 கப் சோள மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் ஸ்வீட் கார்ன், நறுக்கிய காளானை சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்
தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து
விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து தட்டையாக
தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
ரோட்டுக்கடை காளான் வடை தயார்.



Click it and Unblock the Notifications