Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ரோட்டுக்கடை ஸ்பெஷல் தக்காளி சட்னி ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்...!
Rottu Kadai Thakkali Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி அல்லது சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சிம்பிளாக மற்றும் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ரோட்டுக் கடைகளில் பரிமாறப்படும் சுவையான தக்காளி சட்னியை செய்து பாருங்கள்.
இந்த தக்காளி சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னியில் வழக்கமான தக்காளி சட்னியில் சேர்க்கப்படும் பொருட்களுடன் வேறுசில பொருட்களும் சேர்க்கப்படும். அதுதான் இந்த சட்னியை கூடுதல் சுவையானதாக மாற்றுகிறது. இந்த சட்னியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மதுரை ரோட்டுக்கடை தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 பெரிய தக்காளி
- 10 சிவப்பு மிளகாய்
- 4 பூண்டு பல்
- 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- ½ ஸ்பூன் கொத்தமல்லி விதை
- ½ ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் சோம்பு
- ½ ஸ்பூன் வெந்தயம்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் முழு தக்காளியைப் போடவும். தக்காளி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 பூண்டு பல், சிறிது புளி, 10 சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
- தக்காளியின் தோல் உரியத் தொடங்கும் வரை இதை வேகவைக்கவும். இடையிடையே தக்காளியை திருப்பி விடவும்.
- அடுப்பை அணைத்து தக்காளியை தனியாக எடுத்து ஆற விடவும்.
- கொத்தமல்லி விதை, வெந்தயம், சீரகம், சோம்பு மற்றும் ¼ ஸ்பூன் கடுகு ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வறுத்து உலர வைக்கவும்.
- இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதனுடன் தக்காளி கலவையை மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
- கொதிக்க வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி சட்னி அரைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
- சட்னியைத் தாளிக்க ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் இதில் அரைத்த தக்காளி சட்னியை சேர்த்து நன்கு கிளறவும்.
- 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ரோட்டுக்கடை தக்காளி சட்னி ரெடி.
- சூடான இட்லி, தோசையுடன் ஊற்றி சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications