Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்.. சுவையான... ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சால்னா
Rottu Kadai Style Egg Salna: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா?
அப்படியானால் அந்த முட்டையைக் கொண்டு ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சால்னா செய்யுங்கள். இந்த ரோட்டு கடை சால்னா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

முக்கியமாக இந்த சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதோடு இது வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் செய்யக்கூடிய வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டதும் கூட.
உங்களுக்கு ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சால்னா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* முட்டை - 3 (வேக வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
மசாலாவிற்கு...
* துருவிய தேங்காய - 1/4 கப்
* முந்திரி - 15
* கசகசா - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, சோம்பு, சீரகம், கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து குறைவான தீயில் சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து
கிளறி, தக்காளியை நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி வெந்து கொண்டிருக்கும் போது, மிக்சர் ஜாரில் மசாலாவிற்கு
கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மசாலாவை வதங்கி கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்த்து
கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து 15 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டு நீளத் துண்டுகளாக வெட்டிப்
போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான ரோட்டு கடை ஸ்டைல் முட்டை சால்னா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
