Latest Updates
-
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம்
ரோட்டுக்கடை ப்ளைன் சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Rottu Kadai Empty Salna Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் ரோட்டுக்கடை ஸ்டைல் ப்ளைன் சால்னாவை செய்யுங்கள்.
இந்த சால்னா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, பரோட்டா போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சால்னா வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யக்கூடிய வகையில், மிகவும் எளிமையாக இருக்கும்.

உங்களுக்கு ரோட்டுக்கடை ஸ்டைல் ப்ளைன் சால்னா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை ஸ்டைல் ப்ளைன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்ன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 4
* கல்பாசி - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை
* முந்திரி - 10
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு..
* வெங்காயம் - 2
* தக்காளி - 2
* பூண்டு - 10
* இஞ்சி - 4 துண்டு
* புதினா - ஒரு கைப்பிடி
* தேங்காய் - 1/2 மூடி
சால்னா செய்வதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய்,
மல்லி, மிளகு, கல்பாசி, கசகசா, பொட்டுக்கடலை, முந்திரி ஆகியவற்றை
சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம்,
தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய் மற்றும் புதினாவை சேர்த்து வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்கள் மற்றும் வதக்கிய
வெங்காய கலவையைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து
1 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, முடி வைத்து, எண்ணெய் பிரியும் வரை ஒரு 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான ரோட்டுக்கடை ப்ளைன் சால்னா தயார்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications