Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
ரோட்டு கடை சிக்கன் சால்னாவை எப்படி செய்வது-ன்னு தெரியுமா?
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? விடுமுறை என்பதால் அந்த சப்பாத்திக்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். அதுவும் சப்பாத்திக்கு சிக்கன் சைடு டிஷ் உங்களுக்கு பிடிக்குமானால், வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியை செய்யாமல், ரோட்டு கடை சிக்கன் சால்னாவை செய்யுங்கள்.
இந்த சிக்கன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ரோட்டு கடை சிக்கன் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டு கடை சிக்கன் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 3
* கல்பாசி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
* இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
* உப்பு - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* புதினா - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மசாலாவிற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நீரில் கழுவி,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, கிராம்பு, கல்பாசி,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து,
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள்,
மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து 2 நிமிடம் விதக்கி விட
வேண்டும்.
* அதன் பின் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சுருங்கும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு மசாலா
அனைத்து சிக்கனுடன் சேரும் வரை நன்கு கிளறி, நீரை ஊற்றி மூடி வைத்து
15 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, பொட்டுக்கடலை,
ஏலக்காய், சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த தேங்காய் விழுதை சிக்கனுடன் சேர்த்து 1 கப் நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான
ரோட்டுக்கடை சிக்கன் சால்னா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications