Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வீட்டிலேயே நேந்திரம் பழ சிப்ஸ் செய்வது எப்படி?
Ripe Nendran Banana Chips: உங்கள் வீட்டில் உள்ளோர் சிப்ஸ்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி கடைகளில் சிப்ஸ் வாங்கி சாப்பிடுவார்களா? முக்கியமான உங்கள் வீட்டில் இருப்போருக்கு நேந்திரம் பழ சிப்ஸ் பிடிக்குமா?
அப்படியானால் அந்த சிப்ஸை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு நேந்திரம் பழ சிப்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நேந்திரம் பழ சிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த நேந்திரம் பழம் - 5
* தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் நேந்திரம் பழத்தின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட வாழைப்பழத் துண்டுகளை கொஞ்சம்
போட்டு மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.
* பின் திருப்பிப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க
வேண்டும்.
* இதேப் போன்று மீதமுள்ளப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான
மற்றும் மொறுமொறுப்பான நேந்திரம் பழ சிப்ஸ் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications