Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. ஈவ்னிங் 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க... மொறுமொறுன்னு செமயா இருக்கும்..
Crispy Ring Murukku Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு பசியைப் போக்கும் வகையில் மொறுமொறுவென்று ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சரிசி மாவு உள்ளதா?
அப்படியானால் அதைக் கொண்டு மொறுமொறுவென்று ரிங் முறுக்கு செய்யுங்கள். இந்த முறுக்கு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இந்த முறுக்கை ஒருமுறை செய்தால், 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதுவும் காபி, டீயுடன் இந்த முறுக்கை செய்து கொடுக்கும் போது, பசி டக்கென்று அடங்கும்.

உங்களுக்கு ரிங் முறுக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரிங் முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த பச்சரிசி மாவு - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை ஊற்ற
வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
சீரகம், எள்ளு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து, நீரை
நன்கு கொதிக்க விட வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பச்சரிசி மாவை சேர்த்து
கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, தட்டு கொண்டு 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கைகளை நீரை நனைத்துக் கொண்டு,
மாவை நன்கு மென்மையாகும் வரை பிசைந்து கொள்ள வேண்டும்.
* மாவு நன்கு மென்மையானதும், பிசைந்த மாவை சிறிது எடுத்து அதை
நீளவாக்கில் மெல்லியதாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை சிறு சிறு
ரிங் முறுக்கு வடிவத்தில் செய்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ள ரிங் முறுக்குகளைப்
போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரிங் முறுக்கு
தயார்.



Click it and Unblock the Notifications