Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்..
Rice Flour Thattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் மொறுமொறுவென்று ஸ்நாக்ஸ் வேண்டுமென்று கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் அப்படியான ஸ்நாக்ஸ் எதுவும் இல்லையா? கடைக்கு சென்று தான் வாங்க வேண்டுமா? உங்கள் வீட்டில் அரிசி மாவு உள்ளதா?
அப்படியானால் அந்த அரிசி மாவை மட்டுமே கொண்டு அற்புதமான சுவையில் மொறுமொறுப்பான தட்டையை செய்யலாம். இப்படி அரிசி மாவைக் கொண்டு ஒருமுறை தட்டை செய்தால், அதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். குறிப்பாக இந்த தட்டைக்கு அரிசி மாவு மட்டுமே போதும் என்பதால், அதிகம் மெனக்கெட தேவையில்லை.

இப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஸ்நாக்ஸ் செய்ய தெரிந்து வைத்துக் கொண்டால், அதிக பணம் செலவழித்து கடையில் ஸ்நாக்ஸ் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. பணமும் மிச்சமாகும். அதோடு ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக இந்த தட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு அரிசி மாவு தட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி மாவு தட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கருப்பு எள்ளு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் நீரை
ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள்
மற்றும் எண்ணெய் சேர்த்து, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசி மாவை சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* மாவானது அனைத்து நீரையும் உறிஞ்சியதும், ஒரு 2 நிமிடம் தொடர்ந்து
கிளறி விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* மாவு கைபொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், சற்று சூடான நிலையில்
இருக்கும் போதே, அத்துடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சீரகம்,
எள்ளு விதைகளை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் கையில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து, உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். அதுவும்
உங்களுக்கு பெரிதாக வேண்டுமானால், பெரிய அளவு தட்டையாகவோ அல்லது
சிறியதாக வேண்டுமானால் சிறிய அளவு தட்டையாகவோ தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள தட்டைகளை சேர்த்து
மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான
அரிசி மாவு தட்டை தயார்.



Click it and Unblock the Notifications