Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார்
இட்லி, தோசைக்கு ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுக்கும் டிபன் சாம்பார் செய்யுங்கள். இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி, சாம்பார் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? என்ன செய்வது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? அப்படியானால் இட்லி, தோசைக்கு ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுக்கும் டிபன் சாம்பார் செய்யுங்கள். இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். மேலும் காலை வேளையில் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த சாம்பாரை பேச்சுலர்களும் முயற்சிக்கலாம். அந்த அளவில் இந்த சாம்பார் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* தக்காளி - 3
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* சாம்பார் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பாசிப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கழுவிய பருப்புக்களை குக்கரில் போட்டு, அத்துடன் உருளைகிழங்கு துண்டுகளையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கு துண்டுகளை கையால் உடைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியைப் போட்டு சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த பருப்பை உருளைக்கிழங்குடன் சேர்த்து கிளற வேண்டும்.
* பிறகு சிறிது நீரில் சாம்பார் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் என அனைத்தையும் சேர்த்து கலந்து, அந்நீரை வாணலியில் உள்ள பருப்புடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் புளிச்சாறு, சுவைக்கேற்ப உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு தாளித்ததை சாம்பாரில் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
