Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்
ரெஸ்டாரண்ட் செல்லும் போது அநேக மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் சிக்கன் ரெசிபி என்றால் அது டிராகன் சிக்கனாகத் தான் இருக்கும். ஆனால் இந்த டிராகன் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
ரெஸ்டாரண்ட்டுகளுக்கு சென்றால் பெரும்பாலும் நாம் வீட்டில் சமைத்து சாப்பிடாத உணவுகளைத் தான் வாங்கி சாப்பிடுவோம். அப்படி ரெஸ்டாரண்ட் செல்லும் போது அநேக மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் சிக்கன் ரெசிபி என்றால் அது டிராகன் சிக்கனாகத் தான் இருக்கும். ஏனெனில் இதை நாம் அதிகம் வீட்டில் செய்து சாப்பிடமாட்டோம். ஆனால் இந்த டிராகன் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அதுவும் பண்டிகை காலங்களில் அசைவ உணவு சமைக்கும் போது, இதையும் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம் (நீள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* மிளகாய் பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 1
* மைதா - 1/2 கப்
* சோள மாவு - 1/4 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - 1 டீஸ்பூன்
* அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன்
சாஸ் தயாரிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* முந்திரி - 20
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கன் நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் பூண்டு விழுது, சோயா சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, அஜினமோட்டோ, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் நன்கு நீர் வற்றி சற்று கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications