Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்... இத ஒருவாட்டி வீட்டுல செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
Restaurant Style Dragon Chicken Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலான ஒரு டிஷ் செய்து தர நினைக்கிறீர்களா? அதுவும் சிக்கன் கொண்டு புதுமையான ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கனை செய்து கொடுங்கள். இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த ரெசிபியை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை செய்து கொடுக்க கேட்பார்கள்.
உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 400 கிராம்
* முட்டை வெள்ளைக்கரு - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
ப்ரை செய்வதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 20
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி கார்லிக் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயத் தாள் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து
பிரட்டி விட வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சோள மாவு மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து, 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே எண்ணெயில் சிக்கனை சேர்த்து முன்னும், பின்னும் தலா
ஒரு நிமிடம் என 2 நிமிடம் வேக வைத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம்,
பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சில்லி கார்லிக் பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக அதில் ப்ரை செய்த சிக்கன் துண்டுகள், முந்திரி மற்றும்
வெங்காயத் தாள் சேர்த்து நன்கு 2 நிமிடம் உயர் தீயில் வைத்து கிளறி
இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications