Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி முட்டை
நிறைய பேருக்கு முட்டைகளை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. உங்களுக்கு அப்படி பிடிக்காதெனில், வேக வைத்த முட்டைகளைக் கொண்டு சில்லி முட்டை தயாரித்து சாப்பிடுங்கள்.
தினமும் முட்டை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் முட்டைகளை வேக வைத்து சாப்பிட்டால் தான் அதன் சத்துக்கள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் நிறைய பேருக்கு முட்டைகளை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. உங்களுக்கு அப்படி பிடிக்காதெனில், வேக வைத்த முட்டைகளைக் கொண்டு சில்லி முட்டை தயாரித்து சாப்பிடுங்கள். இந்த சைனீஸ் ரெசிபி நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு சில்லி முட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி முட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 4
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - சிறிது (பொடியாக நறுக்கியது)
மாவிற்கு...
* மைதா - 1/2 கப்
* சோள மாவு - 1/2 கப்
* பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சாஸ் செய்வதற்கு...
* தக்காளி கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்
* வினிகர் - 1 1/2 டீஸ்பூன்
* சில்லி கார்லிக் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* க்ரீன் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வேக வைத்த முட்டைகளை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, பேக்கிங் பவுடர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீர் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், முட்டை துண்டுகளை எடுத்து மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தயாரித்து வைத்துள்ள சாஸ், மிளகாய் தூள், மிளகுத் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் பொரித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி முட்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
