Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சப்பாத்திக்கு பிரமாதமாக இருக்கும்... ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சன்னா மசாலா
Restaurant Style Chana Masala: பொதுவாக சப்பாத்தி என்றாலே அனைவருக்கும் பிடித்த சைடு டிஷ் சன்னா மசாலாவாகத் தான் இருக்கும். அதுவும் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கும் ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுக்கப்படும் சன்னா மசாலாவின் சுவை பிடிக்குமா? அந்த சன்னா மசாலாவை வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா?
அப்படியானால் இன்று சப்பாத்திக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சன்னா மசாலாவை வீட்டிலேயே செய்துவிடுங்கள். இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சன்னா மசாலா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சன்னா மசாலா பவுடருக்கு...
* பட்டை - 1 சிறிய துண்டு
* ஏலக்காய் - 2
* கருப்பு ஏலக்காய் - 1
* கிராம்பு - 4
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 5 (அரைத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - தேவையான அளவு
* சன்னா/வெள்ளை சுண்டல் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சன்னா மசாலா
பொடிக்கு கொடுத்துள்ள பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லி விதை, சீரகம்,
சோம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்க
வேண்டும்.
* பின் அந்த வாணலியின் சூட்டில் கசூரி மெத்தி, மிளகாய் தூள், மஞ்சள்
தூள், மாங்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து,
காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், ஒரு மாதம் வரை வைத்து
பயன்படுத்தலாம்.
* பிற்கு சன்னாவை நீரில் 6-7 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலையை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லியை
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தயாரித்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி
கிளற வேண்டும்.
* இறுதியாக ஊற வைத்துள்ள சன்னாவை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, ஒரு
விசில் வந்ததும், தீயைக் குறைத்து, குறைவான தீயில் 30 நிமிடம் மசாலாவை
வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல்
சன்னா மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications