Just In
- 1 hr ago
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 1 hr ago
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- 5 hrs ago
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Don't Miss
- News
மதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா
- Sports
நடராஜன் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார் சொன்ன வார்னே.. ரசிகர்கள் கடும் கோபம்.. வெடித்த சர்ச்சை!
- Automobiles
4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்
- Finance
அதானி கிரீன் பங்குகளை விற்கும் கௌதம் அதானி..! டோட்டல் நிறுவனத்திற்கு ஜாக்பாட்..!
- Movies
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெட் வெல்வெட் குக்கீஸ்
பலரும் ரெட் வெல்வெட் கேக்கை சுவைத்திருப்போம். ஆனால் ரெட் வெல்வெட் குக்கீஸ் சாப்பிட்டதுண்டா? இல்லையெனில், அந்த குக்கீயை உங்கள் வீட்டிலேயே செய்து சுவையுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் ஓவன் இருந்தால், இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். இதை செய்வது மிகவும் எளிது. அதோடு இதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யலாம்.
இப்போது ரெட் வெல்வெட் குக்கீயை எப்படி வீட்டிலேயே செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - கப்
* சர்க்கரையில்லா கொக்கோ பவுடர் - 3 /2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - /4 டீஸ்பூன்
* உப்பு - /4 டீஸ்பூன்
* வெண்ணெய் - /3 கப்
* நாட்டு சர்க்கரை - /2 கப்
* சர்க்கரை - 2 /3 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 2
* பால் - டேபிள் ஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - டீஸ்பூன்
* பிங்க் நிற கேசரி பவுடர் - டேபிள் ஸ்பூன்
* சாக்லேட் சிப்ஸ் - 2/3 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மைதா, கொக்கோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு ஹேண்ட் மிக்ஸர் பயன்படுத்தி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நாட்டுச்சர்க்கரை, சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ளவும்.
* பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, பால் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து ஹேண்ட் மிக்ஸர் பயன்படுத்தி மீண்டும் அடித்துக் கொள்ளுங்கள்.
* அதன் பின் பிங்க் நிற கேசரி பவுடரை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு மைதா கலவையை அடித்து வைத்துள்ள வெண்ணெய் கலவையுடன் சேர்த்து எலக்ட்ரிக் மிக்ஸர் பயன்படுத்தி, குறைவான வேகத்தில் கலந்து கொள்ளவும். அதன் பின் ஒரு கப் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கிளறி, அந்த பௌலை பிளாஸ்டிக் கவரால் மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் ஒரு மணிநேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் வைத்து எடுக்க வேண்டும்.
* பின்பு ஓவனை 175 டிகிரி C-யில் சூடேற்றிக் கொள்ளுங்கள். பின் பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட்டை விரித்து, அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, குக்கீஸ் போன்று தட்டையாக தட்டி, ஒவ்வொரு குக்கீஸிற்கும் இடையே சிறு இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
* இறுதியில் பேக்கிங் ட்ரேயை ஓவனில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும். இப்போது வேண்டுமானால் சிறிது சாக்லேட் சிப்ஸ் தூவி, நன்கு குளிர்ந்த பின் பரிமாறினால், சுவையான ரெட் வெல்வெட் குக்கீஸ் தயார்.
IMAGE COURTESY: yummytummyaarthi