Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பச்சை வேர்க்கடலை இருந்தா.. ஒருடைம் இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Raw Peanut Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் வீட்டில் இட்லி, தோசை என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, வேர்க்கடலை சட்னி என்று செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வேர்க்கடலை சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி வேர்க்கடலை சட்னியை வீட்டில் செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை வேர்க்கடலை சட்னி செய்வதாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள். இந்த சட்னியின் ஸ்பெஷலே, வறுத்த வேர்க்கடலையை பயன்படுத்தாமல், பச்சை வேர்க்கடலை கொண்டு சட்னி செய்வது தான். இதனால் இந்த சட்னி சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அதோடு வேர்க்கடலை சட்னி பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இப்படி ஒருமுறை வீட்டில் இருப்பவர்களுக்கு சட்னி செய்து கொடுத்தால், பின் இந்த ஸ்டைலில் தான் எப்பவும் செய்து கொடுக்க சொல்வார்கள்.

உங்களுக்கு பச்சை வேர்க்கடலை சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஊற வைத்த பச்சை வேர்க்கடலை - 1/2 கப்
* தேங்காய் - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 2
* பூண்டு - 1 பல்
* வரமிளகாய் - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் 1/2 கப் பச்சை வேர்க்கடலையை இரவு தூங்கும் முன் நீரில்
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சை வேர்க்கடலையை எடுத்து, அத்துடன்
பொடியாக நறுக்கிய தேங்காயை 1/2 கப் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 2 சின்ன வெங்காயம், 1 பல் பூண்டு, 1 வரமிளகாய், 1/2
டீஸ்பூன் சீரகம், சிறிய துண்டு புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, நீரை கொஞ்சம் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 கொத்து கறிவேப்பிலை, 1 வரமிளகாய் சேர்த்து
தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான பச்சை வேர்க்கடலை சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications