Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1 கப் ரவையும், பாலும் இருந்தா இந்த வித்தியாசமான ஸ்வீட்டை செஞ்சு பாருங்க... எவ்வளவு செஞ்சாலும் காலியாகிரும்...!
Rava Jamun Recipe in Tamil: ஸ்வீட் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சில இனிப்புகள் அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும். இனிப்பே சாப்பிடாதவர்கள் கூட இந்த இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்புகளில் ஒன்றுதான் குலாப் ஜாமூன். வழக்கமாக குலாப் ஜாமூனை கடைகளில் விற்கும் ரெடிமேட் மாவை வாங்கித்தான் பெரும்பாலான வீட்டில் செய்வார்கள்.
எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரி குலாப் ஜாமூன் சாப்பிடுவது? கொஞ்சம் வித்தியாசமான மற்றும் சூப்பரான குலாப் ஜாமூன் சாப்பிட விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்கள் வீட்டில் கொஞ்சம் ரவையும், பாலும் இருந்தால் போதும் இந்த வித்தியாசமான மற்றும் சுவையான குலாப் ஜாமூனை வீட்டிலேயே செய்து விடலாம். இந்த குலாப் ஜாமூனின் மூலப்பொருட்கள் மாறினாலும் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது.

உங்களுக்கு ரவா குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா குலாப் ஜாமூனின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- ரவா - 1 கப்
- பால் - 3 கப்
- நெய் - 2 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 1/2 கப்
- ஏலக்காய் - மூன்று
- குங்குமப்பூ - சிறிதளவு(தேவைப்பட்டால்)
- எலுமிச்சை பழம் - 1/2 பழம்
- எண்ணெய் - 1/2 லிட்டர்
- சர்க்கரை - 200 கிராம்
செய்முறை:
- முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைக்கவும்.
- பாத்திரம் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும், பின்பு அவற்றில் ஒரு கப் ரவாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- பின்பு ரவை வறுத்த பாத்திரத்திலேயே மூன்று கப் பால் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
- இந்த கலவையானது, நன்றாக கெட்டியாகும் வரை, நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அதாவது பால்கோவா பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- கலவை கெட்டியானதும், அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். இந்த கலவை ஆறியதும் நன்றாக பிசைந்து கொள்ளவும், பிறகு சிறு சிறு உருண்டையாக உருட்டி தனியாக வைத்து கொள்ளவும்.
- 200 கிராம் சர்க்கரையை எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறி கொள்ளவும்.
- சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு, அவற்றில் மூன்று ஏலக்காயை நசுக்கி சேர்த்து கொள்ளவும், அதன்பிறகு சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பில் இருந்து பாகை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில், பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும்.
- பின்னர்பொறித்து வைத்துள்ள உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் போதும் சுவையான ரவா ஜாமுன் ரெடி!



Click it and Unblock the Notifications











