Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. ஈவ்னிங் 15 நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்யலாம்... எப்படின்னு பாருங்க...
Rava Coconut Burfi Recipe In Tamil: மாலை வேளையில் வீட்டில் உள்ள குழந்தைகள் ஸ்வீட் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அப்போது அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு, அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அட்டகாசமான ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் தேங்காய், ரவை, சர்க்கரை உள்ளதா? அப்படியானால் அந்த மூன்று பொருட்களையும் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பர்பியை செய்து கொடுங்கள். இந்த தேங்காய் பர்பி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ரவா தேங்காய் பர்பியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா தேங்காய் பர்பி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1 கப்
* ரவை - 1/2 கப்
* சர்க்கரை - 1 1/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை
சேர்த்து ஓரளவு ஈரப்பதம் போதும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ரவையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து தேங்காயுடன்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் சர்க்கரையை சேர்த்து, நீரை ஊற்றி, அதில் 1
சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி, ஒரு
கம்பி பதத்திற்கு காய்ச்ச வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில்
வைத்து நுரை கட்டும் வரை கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் ரவையை சேர்த்து
நன்கு கிளறி, வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை நன்கு கிளறி இறக்க
வேண்டும்.
* பின் ஒரு தட்டில் நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி
வைத்து, வெதுவெதுப்பான நிலைக்கு வரும் வரை ஆற வைத்து, பின் கத்தியைக்
கொண்டு சதுரத் துண்டுகளாக வெட்டினால், சுவையான ரவா தேங்காய் பர்பி
தயார்.
Image Courtesy: Yummy Tummy Aarthi



Click it and Unblock the Notifications
