Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1 கப் ரவையும், 1/2 கப் தேங்காயும் வெச்சு... ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை சுட சுட செய்யுங்க.. தட்டுல ஒன்னு மிஞ்சாது..
Sweet Rava Cake Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, அவர்களின் பசியைப் போக்கும் வகையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் ரவையும், துருவிய தேங்காயும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு சூப்பரான கேக் செய்து கொடுங்கள். இந்த ரவா கேக் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்நாக்ஸை சுடசுட செய்து கொடுத்தால், தட்டுல ஒன்னும் மிஞ்சாது.

உங்களுக்கு இனிப்பு ரவா கேக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுக்காத ரவை - 1 கப்
* தேங்காய் துருவல் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* பால் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ரவை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து, 1
சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் பால் மற்றும்
1/2 கப் நீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இந்த ரவையை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறி விடும் போது, அந்த
சூட்டிலேயே ரவை ஓரளவு வெந்திருக்கும்.
* பின் அதில் சரக்கரையை சேர்த்து நன்கு கிளறி, நீர் ஓரளவு வற்றி, ரவை
வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, சிறிது நேரம் கழித்து, கலவை
சற்று சூடாக இருக்கும் போதே, கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதை சப்பாத்தி கட்டையால் தட்டையாக ஓரளவு தடிமனாக தேய்த்து,
முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு, சற்று பெரிய சதுர துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அந்த துண்டுகளை எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரவா கேக் தயார்.



Click it and Unblock the Notifications