Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் ரவை இருந்தா போதும்... குழந்தைகளுக்கு பிடிச்ச சூப்பரான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக் செஞ்சு அசத்தலாம்...!
Rava Bonda Recipe in Tamil: குழந்தைகள் ஸ்கூல் போக ஆரம்பித்ததும் அம்மாகள் காலை உணவு, லஞ்ச் பாக்ஸ், ஸ்கூல் ஸ்னாக்ஸ், ஈவினிங் ஸ்னாக்ஸ் போன்றவற்றிற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனைகள் தான் அதிகம் இருக்கும்.
அதில் அவர்கள் சமையல் திறமையை காட்டுவதோடு, குழந்தைகளில் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதில் இருக்கும் கவனம் தான். சரி வாங்க ஆரோக்கியமான சுவையான ரவா போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- ரவை - 2 கப்
- அரிசி மாவு - அரை கப்
- கெட்டித் தயிர் - 3 கப்
- பச்சை மிளகாய் - 3
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- இஞ்சி - சிறியது (2 இன்ச் அளவு)
- பூண்டு - 10 அல்லது 12 பல்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
- பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் ரவை மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அதனுடன் அரிசிவையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை,
மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- அதனுடனே அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேரும் படி நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும்.
- அதனை ஒரு 10 நிமிடம் மூடி போட்டு மூடி ஊற வைக்க வேண்டும்.
- அந்த கலவையை முதலில் பிரட்டும் பொழுது தண்ணீர் கூடுதலாக இருப்பது போல் தோன்றும்.
- ஆனால், 10 நிமிடத்திற்கு நன்றாக ஊறிய பிறகு ரவை தயிரில் ஊறி சிறிது பெரிதாகும் போது தண்ணீரின் அளவு சரியாக இருக்கும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும் தயார் செய்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் சேர்க்கவும்.
- நன்கு வேக வைத்து இருபுறமும் சிவக்க விட்டு எடுத்து கொள்ளவும்.
- இதே போல் மீதம் இருக்கும் மாவையும் சேர்த்து பொரித்து எடுத்தால் சுவையான ரவா போண்டா ரெடி!



Click it and Unblock the Notifications