Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் நோன்பு கஞ்சி
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்று தான் ரமலான் நோன்பு இருப்பது. இந்த ரமலான் நோன்பின் போது இவர்கள் காலை சூரியன் உதிக்கும் முன் நோன்பை திறந்து, சூரியன் மறையும் போது நோன்பை முடிப்பார்கள்.
இப்படி நோன்பை முடிக்கும் போது, நீரை அருந்திய பின் நோன்பு கஞ்சியைக் குடிப்பார்கள். நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து இந்த நோன்பு கஞ்சியை ஒரு டம்ளர் குடித்தாலே வயிறு நிரம்பிவிடும். நோன்பு கஞ்சியை வெறும் காய்கறிகளைக் கொண்டு மட்டுமின்றி, சிக்கன், மட்டன் ஆகியவற்றைக் கொண்டும் தயாரிக்கலாம்.

உங்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சியில் சிக்கனைக் கொண்டு எப்படி நோன்பு கஞ்சி செய்வது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே சிக்கன் நோன்பு கஞ்சியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1 கப்
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* புதினா இலை - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
* தண்ணீர் - 5 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 இன்ச்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* ஜாதிபத்ரி - 2
* அன்னாசிப்பூ - 1
செய்முறை:
* முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பைக் கழுவி, நீரில் 30
நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின் நீரை நீரை வடித்துவிட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், ஜாதிபத்ரி, அன்னாசிப்பூ
ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து 2-3
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள்
சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து ஒருமுறை வதக்கி, காய்கறிகளைப் போட்டு
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சிக்கனைக் கழுவிப் போட்டு, சிறிது துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கிளறி, நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கிளறும் போது, அரிசி நன்கு குலைந்து கஞ்சி போன்று காணப்படும்.
* பின் அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, சில நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சிக்கன் நோன்பு கஞ்சி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











