Latest Updates
-
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம்
ரமலான் ஸ்பெஷல்: கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன்
சிக்கன் அனைவரும் சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் என்பதால், மாலை வேளையில் நோன்பை முடித்த பின் ஒரு சுவையான உணவை சமைத்து சாப்பிட நினைத்தால், அதற்கு கிளாசிக் இந்தியன் பட்டன் சிக்கன் பொருத்தமாக இருக்கும்.
சிக்கன் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு சுவையான உணவுப் பொருள். இந்த சிக்கனைக் கொண்டு பல்வேறு ருசியான உணவுகளைத் தயாரிக்கலாம். அதுவும் தற்போது ரமலான் நோன்பை பலர் மேற்கொள்வதுண்டு. சிக்கன் அனைவரும் சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் என்பதால், மாலை வேளையில் நோன்பை முடித்த பின் ஒரு சுவையான உணவை சமைத்து சாப்பிட நினைத்தால், அதற்கு கிளாசிக் இந்தியன் பட்டன் சிக்கன் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

கீழே கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
* தயிர் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
பட்டர் சிக்கன் மசாலாவிற்கு...
* பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* அரைத்த தக்காளி விழுது - 1 கப்
* தேன் - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* உலர்ந்த வெந்தயக் கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் தயிர், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிக்கனை 4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் அரைத்த தக்காளி விழுது, உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, சிக்கனை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேல் பிரஷ் க்ரீம், தேன் மற்றும் உங்களுக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் சிக்கன் முற்றிலும் வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் உலர்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications