Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு ராஜ்மா வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன், சிக்கன் கிரேவியே தோத்துப் போயிடும்..
Rajma Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? உங்களுக்கு அப்படி ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வாய்க்கு ருசியான வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் ராஜ்மா உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். அதுவும் இந்த ஸ்டைலில் கிரேவி செய்தால், சிக்கன், மட்டன் கிரேவியே தோற்றுபோய்விடும். அந்த அளவில் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ராஜ்மா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜ்மா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* ராஜ்மா - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3
* ஜாவித்ரி - 1
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - 3 பெரிய துண்டு (அரைத்தது)
செய்முறை:
* முதலில் ராஜ்மாவை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, குக்கரில் ராஜ்மாவை கழுவி சேர்த்து, அத்துடன்
ராஜ்மா மூழ்கும் அளவில் நீரை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 7-8 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, அன்னாசிப்ழு,
கல்பாசி, சோம்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது
உப்பு தூவி, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்கி, பின்
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மற்றும் கரம்
மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள ராஜ்மாவை நீருடன் அப்படியே ஊற்றி
கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி,
சிறிது புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 10
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ராஜ்மா கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications