Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
2 பூண்டும்,10 மிளகாயும் இருந்தா இந்த ராஜஸ்தான் பூண்டு சட்னியை அரைங்க..காரமா இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
Rajasthani Garlic Chutney Recipe in Tamil: தினமும் வீட்டில் காலை அல்லது இரவு இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி செய்வது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாகிவிட்ட ஒன்று. அதற்கும் விதவிதமாய் வித்தியாசமாய் சட்னி குழம்பு வகைகளை செய்வது என்பது முடிவிலியாய் தினமும் தொடரும் போராட்டமாக மாறிவிட்டது. என்ன தான் சைடிஷை சுவையாக செய்தாலும் நாளடைவில் அது அலுப்பு தட்டிவிடும். அதற்கு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? சில பொருட்களை கூட்டி அல்லது குறைத்து சுவையை தான் மாற்ற முடியும். ஒவ்வொரு ஊரிலும் சட்னிகளின் சுவை வேறுபட காரணம் இதுதான்.
பொதுவாக பூண்டு சட்னி என்பது இட்லி, தோசைக்கு சைடிஷாக செய்யப்படும் ஒரு தரமான சைடிஷாகும். இந்த கண்கவர் காரமான பூண்டு சட்னி என்பது பொதுவாக வர மிளகாய் மாற்றும் பூண்டு வைத்து தயாரிக்கப்படும். ஆனால் ராஜஸ்தான் பூண்டு சட்னி என்பது இந்த இரண்டுடன் வேறுசில பொருட்களை சேர்த்து கூடுதல் சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த ராஜஸ்தான் பூண்டு சட்னி இட்லி, தோசைக்கு அற்புதமாக இருக்கும். மேலும் இதில் நல்லெண்ணெய் சேர்ப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அனைத்துக்கும் மேல் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ராஜஸ்தான் பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜஸ்தான் பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 10 வர மிளகாய்
- 2 முழு பூண்டு
- 2 அங்குல இஞ்சித் துண்டு
- 1/4 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
- வர மிளகாயை சட்னி அரைப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே 2 மணி நேரம் சூடான நீரில் ஊற வைக்கவும். ஒருவேளை காரம் குறைவாக இருக்க வேண்டுமென்றால் மிளகாயின் விதிகளை நீக்கி விடவும்.
- மிளகாய் நன்கு மென்மையானதும், அதிலிருந்து தண்ணீரை வடித்துவிட்டு, அதில் சிறிதளவு தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவதற்காக தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் உரித்த பூண்டுப் பற்களையும் இஞ்சியையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- பின்னர் ஊறவைத்த சிவப்பு மிளகாய்களைச் சேர்த்து, தேவைக்கேற்ப முன்னரே எடுத்து வைத்திருந்த மிளகாய் தண்ணீரில் சிறிதளவு சேர்த்து, மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகத்தைச் சேர்த்து, அவை வெடிக்கத் தொடங்கும் வரை சில வினாடிகள் வறுக்கவும்.
- சீரகம் பொரிந்ததும் தயார் செய்த மிளகாய் பூண்டு விழுதை தேவையான அளவு உப்புடன் சேர்த்து கடாயில் சேர்க்கவும். குறைந்த மற்றும் மிதமான தீயில் சட்னியை நன்றாக கிளறவும்.
- பின்னர் ஒரு மூடியால் மூடி, சட்னி நன்கு சுருண்டு, ஓரங்களில் எண்ணெய் பிரியத் தொடங்கும் வரை சுமார் 15 மிதமான தீயில் சமைக்கவும். பிறகு அதை ஆறவைத்து, சிறிது எலுமிச்சை சாற்றைக் கலந்துவிடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ராஜஸ்தானி பூண்டு கார சட்னி தயார். இதை உங்களுக்கு பிடித்த இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
- இதை ஒரு காற்றுப்புகாத கொள்கலனில் அடைத்து வைத்தால் 1 மாதம் வரை கூட கெட்டுப்போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications











