Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இட்லி, தோசைக்கு சட்டுனு இந்த ராஜஸ்தான் ஸ்டைல் பூண்டு சட்னி அரைச்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Rajasthani Garlic Chutney Recipe in Tamil: நாம் வீட்டில் எந்த வகையான டிபன் செய்தாலும் நமக்கு பெரிய தலைவலியாக வருவது சைடு-டிஷ் தான். விதவிதமாக எதை தான் மாற்றி சமைப்பது என்பது தான் அதில் இருக்கும் மிகப் பெரிய கஷ்டம். ஒவ்வொரு டிபன் வகைக்கும் அதுக்கு ஏத்த மாதிரி சட்னி சாம்பார் இல்ல குருமா செய்யணும். எல்லா டிபன் வகைக்கும் ஒத்து போற மாதிரியான ஒரு சட்னி தான் ராஜஸ்தானி பூண்டு சட்னி. சட்டுன்னு எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- பூண்டு - 25 அல்லது 30 பல்
- மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- எலுமிச்சை - ½ பழம்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
செய்முறை:
- எலுமிச்சை பழத்தை நறுக்கி சாறு பிழிந்து விதைகளை நீக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
- பூண்டு பற்களை தோல் உரித்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- உரித்து வைத்த பூண்டு பற்களை வீட்டில் இருக்கும் அம்மி அல்லது உரலில் சேர்த்து ஒன்று இரண்டாக தட்டி கொள்ளவும்.
- உரல் இல்லாதவர்கள் உலர்ந்த மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் 2 பால்ஸ் விட்டு எடுத்து கொள்ளவும்.
- பின் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் மிளகாய் தூள், மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
-பின் அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
- கடைசியாக அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கருவேப்பிலை இலைகளை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- அதனுடன் கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- நாம் கலந்து வைத்த கலவையை சேர்த்து கிளறி மூடி போட்டு வேக விடவும். அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளறி விட்டு கொள்ளவும்.
- நன்றாக எண்ணெய் பிரிந்து வெந்து வரும் வரை வேக விடவும்.
- நன்றாக வெந்து வந்ததும் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறை சேர்த்து கிளறவும்.
- பின் அதில் கஸ்தூரி மேத்தி இலைகளை கைகளால் நன்றாக கசக்கி சேர்த்து கிளறவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ராஜஸ்தானி பூண்டு சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications