Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
ராஜஸ்தான் ஸ்டைல் பூண்டு சட்னி ரெசிபி... ஒரு தடவ அரையுங்க... ஒரு வாரத்துக்கு சைடிஷ் பிரச்சினையே இல்ல...!
Rajasthan Garlic Chutney Recipe in Tamil: வீட்டில் தினசரி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி செய்வது நமக்கு வழக்கமாகிவிட்ட ஒன்று. அதற்கும் விதவிதமாய் வித்தியாசமாய் சட்னி குழம்பு வகைகளை செய்து கொண்டு இருக்கிறோம். என்ன தான் சுவையாக செய்தாலும் சில நேரத்தில் அலுப்பு தட்டிவிடுகிறது. அதற்கு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? சில பொருட்களை கூட்டி குறைத்து சுவையை தான் மாற்ற முடியும். ஒவ்வொரு ஊரிலும் சுவை வேறுபட காரணம் இது தான்.
பூண்டு சட்னி என்பது பொதுவாக இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் எளிதான மற்றும் சுவையான சட்னி. இந்த சட்னி அனைவராலும் விரும்பப்பட காரணம் இது அரைக்க எளிதானது மற்றும் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். அதிலும் இந்த ராஜஸ்தான் பூண்டு சட்னி ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த பதிவில் ராஜஸ்தான் பூண்டு சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பூண்டு - 10 அல்லது 15 பல்
- காய்ந்த மிளகாய் - 5-6 (அல்லது காரத்திற்கு ஏற்ப)
- சின்ன வெங்காயம் - 10 அல்லது 12
- புளி - சிறிதளவு (ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு)
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.
- வெங்காயத்தின் மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற பூஞ்சையை தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- மிளகாயை சேர்த்து தனியாக வறுத்து எடுத்து ஆறவிடவும்.
- வாணலியில் மீதம் இருக்கும் எண்ணெயில் தோல் உரித்து வைத்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி ஆறவிடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கி ஆற வைத்த பூண்டு, வெங்காயம், மற்றும் வறுத்து வைத்த மிளகாயை சேர்க்கவும்.
- பின் அதனுடன் புளி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- பின் அதில் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை சேர்த்து
பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் அடுப்பை அணைத்து அதை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான
பூண்டு சட்னி ரெடி!
- உங்கள் காரத்திற்க்கு ஏற்ப மிளகாயின் அளவை கூட்டி குறைத்து கொள்ளலாம்.
- நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க தாளிப்பில் சட்னியை சேர்த்து லேசாக வதக்கி வைத்தால் கெட்டு போகாது.
- இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைடு-டிஷ் ஆக இருக்கும்.



Click it and Unblock the Notifications











