Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சத்தான... ராகி பால் கொழுக்கட்டை
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? நீங்கள் கம்பு, திணை, ராகி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்ப்பவரா? அப்படியானால் இன்று ராகி பால் கொழுக்கட்டை செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? நீங்கள் கம்பு, திணை, ராகி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்ப்பவரா? அப்படியானால் இன்று ராகி பால் கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இந்த பால் கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானது. முக்கியமாக இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு ராகி பால் கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பால் கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* பால் - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* பச்சை ஏலக்காய் - 3
* உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து கையால் கிளறி விட வேண்டும். பின் மெதுவாக சுடுநீரை ஊற்றி, கரண்டியால் மெதுவாக கிளறி, சூடு ஆறியதும் கையால் நன்கு மென்மையாக பிசைந்து, மூடி வைத்து ஒரு 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரித்தில் பால் மற்றும் நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை ஒரு கையளவு எடுத்து, அதை முறுக்கு பிழியும் குழலில் வைத்து, கொதிக்கும் பாலில் பிழிந்து விட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பாலில் பிழிந்து 3-5 நிமிடம் அப்படியே வேக வைத்து இறக்கினால், சுவையான ராகி பால் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு:
* இந்த பால் கொழுக்கட்டைக்கு தேங்காய் பால், கண்டென்ஸ்டு மில்க், பாதாம் பால் என்று எதைக் கொண்டு வேண்டுமானாலும் தயாரிக்கலாம்.
* வேண்டுமானால் நெய்யில் வறுத்த நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.
Image Courtesy: southindianfoods



Click it and Unblock the Notifications
