Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ராகியை வைச்சு குழந்தைகளுக்கு இப்படி ஒரு இனிப்பு செஞ்சு கொடுங்க... நல்லா விரும்பி சாப்பிடுவாங்க...!
Ragi Kozhukattai Recipe in Tamil: கேழ்வரகு, கேப்பை, மற்றும் ஆரியம் என ராகி இடத்திற்கு ஒரு பெயரால் அறியப்படுகிறது. ராகியின் சுவை சிலருக்கு பிடிக்காது, குழந்தைகளை சாப்பிட வைப்பது சிறிது கடினமான ஒன்று தான். ஆனால் ராகி நமது உடலின் எலும்புகளை இரும்பாக்க வல்லது. இதில் நிறைந்திருக்கும் கால்சியம் பற்களின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை குழந்தைகளுக்கு எப்படி பிடிக்கும் படி செய்வது என்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் சந்தேகம். கொழுக்கட்டை என்பது பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஒன்று. கொழுக்கட்டையை பெரும்பாலும் அரிசி மாவு வைத்து தான் செய்வோம். இங்கு ராகி மாவை வைத்து எப்படி கொழுக்கட்டை செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- அவல் - ½ கப்
- ஏலக்காய் - 3
- தேங்காய் - 1 கப்
- ராகி மாவு - 1 கப்
- வெல்லம் - 1 கப்
- வேர்க்கடலை - ½ கப்
- உப்பு - 1 சிட்டிகை
- நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- வாணெலியை அடுப்பில் வைத்து அவல் சேர்த்து மிதமான தீயில் வறுத்து
ஆற வைக்கவும்.
- அதே வாணெயில் வேர்க்கடலை சேர்த்து கருகிவிடாமல் நன்றாக வறுத்து ஆற
விடவும்.
- மீண்டும் அதே வாணெலியில் ராகி மாவை சேர்த்து நன்றாக வறுத்து
கொள்ளவும்.
- தேங்காயை நறுக்கியோ அல்லது துருவியோ ஒரு கப் அளவிற்கு எடுத்து
கொள்ளவும்.
- ஆற வைத்த அவலை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- அதனுடன் ஏலக்காய் சேர்த்து பொடியாக அரைத்து அதை ராகி மாவுடன்
கொள்ளவும்.
- வீட்டில் அவல் இல்லை என்றால் அரை கப் அரிசி மாவு எடுத்து
கொள்ளலாம்.
- அரிசி மாவை நன்றாக வறுத்து சேர்த்து கொள்ள வேண்டும்.
- வறுத்து வைத்த வேர்க்கடலை ஆறியதும் தோல் நீக்கி சுத்தம் செய்து
கொள்ளவும்.
- தோல் நீக்கிய வேர் கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி
செய்து அதையும் ராகி மாவில் சேர்க்கவும்.
- மீண்டும் ராகி மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மீதம் இருக்கும்
நெய் சேர்த்து நன்றாக கலக்கும் படி பிசைந்து கொள்ளவும்.
- வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ½ கப் அளவிற்கு தண்ணீர்
சேர்க்கவும்.
- அதை அடுப்பில் வைத்து நன்றாக கரையும் வரை கலந்து விடவும்.
- வாணெலியில் ½ ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக விடவும்.
- பின் அதில் பொடியாக நறுக்கிய அல்லது துருவிய தேங்காயை சேர்த்து
கிளறவும்.
- வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டி தேங்காயுடன் சேர்த்து கிளறி
அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த கலவையை ராகி மாவுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்,
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
- சூடு குறைந்ததும் உருண்டையாகவோ, பிடி கொழுக்கட்டையாகவோ, அல்லது மோதக
அச்சில் சேர்த்து உங்களுக்கு விருப்பமான வடிவில் பிடித்து
கொள்ளவும்.
- இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து காய
வைக்கவும்.
- தண்ணீர் சூடானதும் பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில்
வைத்து வேக விடவும்.
- 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்றாக வேக வைத்து இறக்கினால் சுவையான
ஆரோக்கியமான ராகி கொழுக்கட்டைகள் ரெடி!



Click it and Unblock the Notifications