Latest Updates
-
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ராகி போண்டா
போண்டாவில் பல வெரைட்டிகள் உள்ளன. நீங்கள் வித்தியாசமான போண்டா ரெசிபிக்களை முயற்சிக்க நினைப்பவராயின், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு ராகி போண்டா குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் போது மாலை வேளையில் காபி, டீயுடன் சூடாகவும், நன்கு மொறுமொறுப்பாகவும் பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். போண்டாவில் பல வெரைட்டிகள் உள்ளன. நீங்கள் வித்தியாசமான போண்டா ரெசிபிக்களை முயற்சிக்க நினைப்பவராயின், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு ராகி போண்டா குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. ராகி உடலுக்கு ஆரோக்கியமானது. ராகியை இதுவரை கூழ், கஞ்சி என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் ராகியைக் கொண்டு அற்புதமான சுவையில் போண்டா செய்யலாம். இது அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ராகி போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இட்லி மாவு - 2 கப்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* ராகி மாவு - 1/2 கப் முதல் 3/4 கப் வரை
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், ராகி மாவு, இஞ்சி, கறிவேப்பிலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்படி அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான ராகி போண்டா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications