Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
1 கப் ராகி மாவும், 1 கப் இட்லி மாவும் வெச்சு.. ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க...
Ragi Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு காபி, டீ குடிக்க கொடுக்கும் போது சூடாக ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவு மற்றும் இட்லி மாவு உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு சுவையான போண்டாவை செய்து கொடுங்கள். இந்த போண்டா ஒரு சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸாக இருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ராகி போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* இட்லி மாவு - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் இட்லி மாவை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சீரகம், பெருங்காயத் தூள், சிறிது உப்பு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி போண்டா மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை சிறு கரண்டியில் எடுத்து,
கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்தால், ராகி போண்டா தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications