Latest Updates
-
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
முட்டையை இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் கிரேவி செஞ்சு பாருங்க... சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்...!
Punjabi Style Egg Curry Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அதுவும் சாதத்திற்கு என்று கிரேவி, பொடிமாஸ் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையை வைத்து இந்த பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலாவை செய்யுங்கள். இந்த பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, தோசை என அனைத்திற்கும் செம காம்பினேஷனாக இருக்கும்.
இந்த முட்டை மசாலா தாபா ஸ்டைலில் ஹோட்டலில் சாப்பிடும் சுவையிலேயே இருக்கும். இப்படி வித்தியாசமான முட்டை மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாபி முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 வேகவைத்த முட்டை
- 4 கிராம்பு
- 1 பிரியாணி இலை
- 2 ஏலக்காய்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 1 பெரிய வெங்காயம் அரைத்தது
- 2 தக்காளி அரைத்தது
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு எண்ணெய்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
செய்முறை:
- பஞ்சாபி ஸ்டைல் முட்டை மசாலாவைத் தொடங்க, முதலில் முட்டைகளைத் தேவையான அளவு தண்ணீரில் வேகவைக்கவும். முட்டை நன்கு வெந்ததும், உரித்து பாதியாக வெட்டி தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 3 நிமிடங்கள் வேக விடவும்.
- பச்சை வாசனை போனதும் தக்காளி விழுது மற்றும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா தூள் உட்பட அனைத்து மசாலாக்களையும் தேவையான உப்பையும் சேர்க்கவும்.
- மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் அரை கப் தண்ணீர் சேர்த்து, கிரேவி கெட்டியாகும் வரை வேக விடவும்.
- கிரேவி நன்றாக கெட்டியானதும் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து, கிரேவியுடன் கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான பஞ்சாபி ஸ்டைல் முட்டை கிரேவி ரெடி. இதை சூடான சப்பாத்தி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











